கொக்கர கொக்கரக்கோ

Kokkara Kokkarako Lyrics in Tamil
Movie: Ghilli(கில்லி)
Music: Vidyasagar
Singers: Udit Narayan and Sujatha Mohan
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Kokkara Kokkarako Lyrics in Tamil

குழு: தும் ஷாக்
தும் தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும்
தும் ஷாக் ஹேய் ஹேய்

குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹேயா

ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ

ஆண்: கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே
பெட்டை கோழி கொக்கரக்கோ

ஆண்: சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா வா

ஆண்: அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம் நீ வா ஆஆ

ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ

ஆண்: வெள்ளிமணி கொலுசுக்குள்ள
துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க
சாமிகிட்ட கேட்டிருக்கேன்

குழு: தும் ஷாக்
தும் தும் ஷாக் ஹே ஹே

பெண்: எல்லோரும் அருகிருக்க
பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட
ஆண்டவனை பாத்திருக்கேன்

ஆண்: எண்ணம் இருந்தா
எதுவும் நடக்கும் தன்னால
ஏ நீ துணிஞ்சா உலகம்
உனக்கு பின்னால

பெண்: குத்துவிளக்கா சிரிச்சா
சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச
மனச இப்போது

ஆண்: நம்ம பக்கம் காத்து
வீசுறத பாத்து
நல்லவங்களை சேர்த்து
நீ போடு தினம் கூத்து

குழு: தும் ஷாக்
தும் ஷாக் தும் ஷாக்

ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ

பெண்: கந்தனுக்கு வள்ளிய போல
கண்ணனுக்கு ராதைய போல
ஆசைகொண்ட உயிருக்கெல்லாம்
துணையிருக்கு பூமியில

குழு: தும் ஷாக்
தும் தும் தும் ஷாக் ஹே ஹே

ஆண்: கண்ணுக்குள்ள கனவு இருக்க
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா
தெரிஞ்சவங்க யாருமில்லை

பெண்: றெக்கை கட்டி பறக்கும்
பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும்
மறைக்கும் நெஞ்சோடு

ஆண்: ஹே சிட்டுகுருவி சிரிக்கும்
சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும்
குதிக்கும் என்னோடு

பெண்: சிட்டான் சிட்டான் சிடுக்கு
இப்ப உள்ளதெல்லாம் நமக்கு
கெட்டததான் ஒதுக்கு
இனி நம்ம கிட்ட கெழக்கு

ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ

ஆண்: கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே
பெட்டை கோழி கொக்கரக்கோ

ஆண்: சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா வா

ஆண்: அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம் நீ வா ஆஆ

குழு: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ

குழு: கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே
பெட்டை கோழி கொக்கரக்கோ