கொடியவனின் கதைய

Music: S Thaman
Singers: Sriram, M. L. R. Karthikeyan, and Malathy Lakshman

Kodiavanin Kadhaya Lyrics in Tamil

பெண் குழு: கொடியவனின் கதைய முடிக்க
கொரவலையத் தேடிக் கடிக்க
நாரு நாரா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க

பெண் குழு: புழுவப்போல நசுக்கி எரிய
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டுத் துண்டா நறுக்கி எடுக்க
சந்திக்கே அதிர்ச்சிக் கொடுக்க
சகல வித வதைகள் புரியவே

பெண்: வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா

பெண் குழு: கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்

பெண்: ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

பெண் குழு: ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்

பெண்: கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன
கிழிச்செறியப் போறா
கதற கதற கதற உந்தன்
கத முடிக்கப் போறா
ஹே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டா டா

பெண் மற்றும் ஆண்: சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்

பெண்: வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா

பெண் குழு: கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்

பெண்: ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

பெண் குழு: ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்

—BGM—

பெண் மற்றும் ஆண்: கபால மாலைகள் கழுத்தில் உருல
கண்களைப் பார்த்தாலே எவனும் மெறல
ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே
அதிரி புதிரி ஆச்சி

பெண் மற்றும் ஆண்: அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி
எதிரினில் வந்தாச்சே

பெண் மற்றும் ஆண்: கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும்
கண்ணாடி விரிய புட்டியும்
சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும்
வெள்ளிப்கோல் வரையநாகனும்

பெண் மற்றும் ஆண்: பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்
பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்
குடி விரியனும் கட்டு விரியனும் கூடி சீரவே

பெண் மற்றும் ஆண்: சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்

பெண் மற்றும் ஆண்: உயிர் எடுப்பேன்
கத முடிப்பேன்
உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்
கருவருப்பேன் நான்

—BGM—

பெண் மற்றும் ஆண்: கண்ணுல நெறுப்புப் பொறிப் பறக்குது
கைகளும் கால்களும் துடித் துடிக்குது
பற்க்களும் பசியில் நர நரங்குது
கொல்லுற நேரம் வந்தாச்சே

பெண் மற்றும் ஆண்: வானமும் பூமியும் நடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உறுமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே

பெண் மற்றும் ஆண்: சித்திரை வெய்யிலும் கலங்கிப் போகும்
செவக்கும் இவ கண்ணப் பார்த்து
அத்தனை திசையும் அதிர்ந்துப் போகும்
அடடா இவ வேகம் பார்த்து

பெண் மற்றும் ஆண்: குதிரை நடுங்கி ஓட ஓட
உடலை இவ கிழிக்கப் போறா
உதவ வேணாம் பயங்கரத்த காட்டப் போறா

பெண் மற்றும் ஆண்: சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்

பெண் மற்றும் ஆண்: வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா

பெண் குழு: கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்

பெண் மற்றும் ஆண்: ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

பெண் குழு: ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்

பெண் மற்றும் ஆண்: எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும்
இமைகள் ஏது உறக்கம் உறக்கம்
அடிக்கும் அடியில் மலையும் பறக்கும்
குருதி நதியில் பூமி சிவக்கும்

பெண் மற்றும் ஆண்: அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்
பதறும் ஓசை அகிலம் திரும்பும்
மோதிய கோடரி முனைகள் ஒடையும்
ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்

பெண் மற்றும் ஆண்: கட்டிய கயிறு அறுந்து உதிரும்
கனவு காணும் வதைகளில் நடக்கும்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team