கரிசல் காட்டு பெண்ணே

Karisai Kaattu Pennae Lyrics in Tamil
Movie: Raja(ராஜா)
Music: S. A. Rajkumar
Singers: K. S. Chithra, Manikka Vinayagam and Chorus
Lyricist: S. A. Rajkumar(எஸ். ஏ. ராஜ்குமார்)

Karisai Kaattu Pennae Lyrics in Tamil

ஆண்: ஓ ஓ ஊசியிலை காட்டுகுள்ள
ஒத்தயில போற புள்ள
மாமன் நியாபகத்தில்
யாரை தேடியிங்கு
பாட்டு நீ படிச்ச

பெண்: கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

பெண்: என் இரு விழி நடுவினில்
இருப்பவன் எவனோ
அவனை கண்டாயா

பெண்: என் இருதய நரம்பினை
அறுத்தவன் எவனோ
அவனை கண்டாயா

பெண்: கொஞ்சம் கனவு கொடுத்தவன்
என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன்
இன்று ஏனோ தனியே சென்றான்

குழு: உன் இரு விழி நடுவினில்
இருப்பவன் எவனோ
அவனை கண்டாயா

குழு: உன் இருதய நரம்பினை
அறுத்தவன் எவனோ
அவனை கண்டாயா

பெண்: கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

பெண்: ஓ ஒரு முறை பார்த்தால்
உயிர் வரை வேர்த்தேன்
அசைவத்தில் ஆசை அதிகம்
என்னை தின்றானே

பெண்: ஓ அவன் மட்டும் இங்கே
ஒரு நொடி வந்தால்
அரை டஜன் பிள்ளை பெற்று
கையில் தருவேனே

பெண்: அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்

பெண்: என் அவனுக்கு மட்டும்
யானை பலத்தில் ஏழு மடங்காச்சே
அவன் ஒரு விரல் தீண்டி
நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே

பெண்: கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

ஆன் குழு: தாமரை பெண்ணே
தாமரை பெண்ணே

பெண் குழு: தாமரை பெண்ணே
தாமரை பெண்ணே

ஆன் குழு: தாமரை பெண்ணே
தாமரை பெண்ணே
காதலன் வருவான் காத்திரு

பெண் குழு: உன் கைவளை ஒளி
அவன் காதினில் கேட்கும்
வைகறை பெண்ணே காத்திரு

பெண்: ஓ வருஷங்கள் எல்லாம்
நிமிஷங்கள் ஆக
அவன் வருவான் என்று காத்திருந்தேன்

பெண்: ஓ அவன் குரல் கேட்கும்
திசைகளில் எல்லாம்
புது புது கோலம் போட்டு வைத்தேன்

பெண்: என் தாவணி வயதுகள் போச்சே
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சே
அந்த ராட்சசன் ஏன் வர வில்லை
இன்னும் பூகுடை சாய்ந்திட இல்லை

பெண்: என் இருபது போகும்
எழுவதும் ஆகும்
அவனை விடமாட்டேன்

பெண்: என் மடியினில் ஒரு நாள்
தலை வைத்து தூங்கும்
அழகை நான் பார்ப்பேன்

பெண்: கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

குழு: உன் இரு விழி நடுவினில்
இருப்பவன் எவனோ
அவனை கண்டாயா

குழு: உன் இருதய நரம்பினை
அறுத்தவன் எவனோ
அவனை கண்டாயா

பெண்: கொஞ்சம் கனவு கொடுத்தவன்
என் தூக்கம் திருடிச் சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன்
இன்று ஏனோ தனியே சென்றான்

குழு: உன் இரு விழி நடுவினில்
இருப்பவன் எவனோ
அவனை கண்டாயா

குழு: உன் இருதய நரம்பினை
அறுத்தவன் எவனோ
அவனை கண்டாயா