கண்மணி அன்போடு

Kanmani Anbodu Lyrics in Tamil
Movie: Gunaa(குணா)
Music: Ilaiyaraaja
Singers: Kamal Hassan and S. Janaki
Lyricist: Vaali(வாலி)

Kanmani Anbodu Lyrics in Tamil

ஆண்: கண்மணி அன்போட காதலன்
நான் நான் எழுதும் லெட்டர் ச்சீ மடல்
இல்ல கடுதாசி வச்சிகலாமா
வேணாம் கடிதமே இருக்கட்டும் படி

பெண்: கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே

ஆண்: பாட்டாவே படிச்சிட்டியா
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நா இங்க சௌக்கியம்

பெண்: பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

ஆண்: உன்ன நெனச்சு பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்தை

பெண்: உன்னை எண்ணிப் பார்க்கையில்
கவிதை கொட்டுது

ஆண்: அதான்

பெண்: அத எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது

ஆண்: அதே தான் ஆஹா பிரமாதம்
கவிதை கவிதை படி

பெண்: கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

பெண்: உன்னை எண்ணிப் பார்க்கையில்
கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது
ஓஹோ கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே

ஆண்: லா லா லா லா
லா லா லா லா லா லா

பெண்: பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

ஆண்: லா லா லா லா
லா லா லா லா லா லா

ஆண்: எனக்கு உண்டான காயம்
அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல
என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல

ஆண்: இதையும் எழுதிக்க
நடுல நடுல மானே தேனே
பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்

ஆண்: இதோ பாரு
எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா தாங்காது
அபிராமி அபிராமி அபிராமி

பெண்: அதையும் எழுதணுமா

ஆண்: ஹான் இது காதல்
என் காதல் என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது
என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்டினு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது

ஆண்: மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

பெண்: உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன
பொன்மானே பொன்மானே

பெண்: என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே

பெண்: எந்தன் காதல் என்னவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது

பெண்: மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது

பெண்: அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா

ஆண்: சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே

ஆண்: அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
உனக்கு புரியுமா

பெண்: லா லா லா லா
லா லா லா லா லா லா

ஆண்: லா லா லா லா
லா லா லா லா லா லா

பெண்: லா லா லா லா
லா லா லா லா

ஆண்: லல லா லா
லா லா லா லா

ஆண் மற்றும் பெண்: ஓஹோ லா லா லா லா
லா லா லா லா லா லா
லா லா லா லா
லா லா லா லா லா லா