Kangal Irandal Lyrics in Tamil
ஆண்: கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
ஆண்: சின்ன சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
ஆண்: கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய்
போதாதென
ஆண்: சின்ன சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
பெண்: பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேனே மாற்றி
பெண்: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்: இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
பெண்: மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
ஆண்: கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
ஆண்: சின்ன சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
பெண்: கறைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதிற்க்குள் எப்போது
நுழைந்திட்டாய்
பெண்: உடலும் அல்லாத
உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து
கலந்திட்டாய்
ஆண்: உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
பெண்: கண்கள் எழுதும்
இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா
பெண்: ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்: பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேனே மாற்றி
பெண்: கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
ஆண்: சின்ன சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்