Kandaangi Kandaangi Lyrics in Tamil
ஆண்: கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்தப் பொண்ணு
கண்டாலேக் கிறுகேத்தும்
கஞ்சா வச்சக் கண்ணு
ஆண்: ஏ கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்தப் பொண்ணு
கண்டாலேக் கிறுகேத்தும்
கஞ்சா வச்சக் கண்ணு
ஆண்: அந்தக் கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதித் தாரேன்டி
முத்தம் தரியா
பெண்: ஓ கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்தப் பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்சக் கண்ணு
பெண்: இந்தக் கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதித் தீராது
தள்ளி நில்லையா
ஆண்: அடி உன் வீடு தல்லாக்குளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே
ஆண்: அழகா் மலகோயில் யான வந்து
அல்வாவத் திண்பதுப் போல்
என் ஆச உன்னத் திண்ணட்டுமே
ஆண்: ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது
பெண்: வெள்ள முழி வெளியத் தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈரக்கொழ நடுங்குது
ஆண்: சின்னச் சின்ன
பொய்யும் பேசுற
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற
பெண்: நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே
ஆண்: நீ தேயாத நாட்டுக் கட்ட
தெரியாம மாட்டிக்கிட்டேன்
என் ராசி என்றும் மன்மதனே
பெண்: கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்தப் பொண்ணு
கண்டாலேக் கிறுகேத்தும்
கஞ்சா வச்சக் கண்ணு
ஆண்: கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுரப் பறிக்கிற
என்ன செய்ய நினைக்குற
பெண்: அம்பு விட்டு
ஆள அடிக்கிற
தும்பு விட்டு
வாலப் புடிக்கிற
ஆண்: தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே
பெண்: எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே ஏ
ஆண்: கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்தப் பொண்ணு
கண்டாலேக் கிறுகேத்தும்
கஞ்சா வச்சக் கண்ணு
பெண்: இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதித் தீராது
தள்ளி நில்லையா
பெண்: கண்டாங்கி கண்டாங்கி
கண்டாலேக் கிறுகேத்தும்
ஆண்: கஞ்சா வச்சக் கண்ணு