Kanavellam Neethane Lyrics in Tamil
ஆண்: கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
ஆண்: பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
ஆண்: கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
ஆண்: சாரல் மழை துளியில்
உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
ஆண்: என்னை அறியாமல்
மனம் பறித்தாய்
உன்னை மறவேனடி
ஆண்: நிஜம் புரியாத
நிலை அடைந்தேன்
எது வரை சொல்லடி
ஆண்: காலம் தோறும்
நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபகங்கள்
தினம் தினம்
ஆண்: கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
ஆண்: தேடல் வரும் பொழுது
என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன்
நான் உன் வரவால் விழி திறந்தேன்
ஆண்: இணை பிரியாத
நிலை பெறவே
நெஞ்சில் யாகமே
ஆண்: தவித்திடும் போது
ஆறுதலாய்
உன் மடி சாய்கிறேன்
ஆண்: காலம் தோறும்
நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபகங்கள்
தினம் தினம்
ஆண்: கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
ஆண்: பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
ஆண்: கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே