Kanava Illai Kaatra Lyrics in Tamil
ஆண்: கனவா இல்லை காற்றா
கனவா நீ காற்றா
ஆண்: கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ
ஆண்: இப்படி உன்னை ஏந்தி கொண்டே
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திர தரையில் பாய் இடவா
ஆண்: கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ
ஆண்: நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி
ஆண்: நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி
ஆண்: காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
ஆண்: காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
ஆண்: உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
ஆண்: உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது
ஆண்: கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ
ஆண்: கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ
ஆண்: கனவா நீ காற்றா
கனவா நீ காற்றா