Kalvare Kalvare Lyrics in Tamil
பெண்: கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
பெண்: உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா
அகம் அறிவீரோ அருள் புரிவீரோ
பெண்: வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே
உடை களைவீரோ உடல் அணிவீரோ
பெண்: என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
பெண்: எங்கெங்கே உதடு போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆளச் சொல்வேனே
பெண்: வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
பெண்: வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகின்றதா
பெண்: கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
பெண்: கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
கலை சொல்லி தாரீரோ