Kadal Raasa Naan Lyrics in Tamil
ஆண்: ஆடாதக் கால்களும் ஆடும்மய்யா
எங்கள் காதோரம் கடல் புறா பாடும்மய்யா
வங்காளக் கரையோரம் வாரும்மய்யா
எங்கள் பாய்மர விளையாட்டைப் பாரும்மய்யா
ஆண்: கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்துக் குளித்திடும்
கடல் ராசா நான் மரியேன் நான்
ஆண்: நெத்திலிக் கொழம்பு வாடை
எங்க நீரோடிக் காத்துல வீசும் அய்யா
ஏ ஒத்த மரக் கல்லும் உப்புக் கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா
ஆண்: ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையைக் காட்டும்
கோமாளி நான்
ஆண்: ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையைக் காட்டும்
கோமாளி நான்
ஆண்: கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்துக் குளித்திடும்
கடல் ராசா நான் மரியேன் நான்
ஆண்: நான் ஒத்தையில பாடுறேனேத் தன்னால
இந்தப் பாலைவன பாறைகளின்
முன்னால முன்னால
ஆண்: நான் ஒத்தையில பாடுறேனேத் தன்னால
இந்த பாலைவனப் பாறைகளின் முன்னால
வெறும் புத்திகெட்டப் பாவிகளின் நடுவே
பொலம்பும் என் உயிரே உயிரே
ஆண்: நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக
இப்ப ஊனமாகச் சுத்துறேனே அடியே
என் கூட்டம் வரும் உள்ளச் சேரும் நெனப்புல
தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே
ஆண்: கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்