Kaattumalli Lyrics in Tamil
ஆண்: வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
ஆண்: வழி நெடுக காட்டுமல்லி
பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்ல
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
பெண்: வழி நெடுக காட்டுமல்லி
ஆண்: கனவெனக்கு வந்ததில்ல
இது நிசமா கனவு இல்ல
பெண்: கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
ஆண்: மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெண்: ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
ஆண்: காத்திருப்பேன்
நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்த்தும் கவனமில்லை
ஆண்: காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
பெண்: கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
ஆண்: நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்னவிட்டு போவதில்ல
பெண்: ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
ஆண்: இறு சிறு உசுரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
பெண்: சாட்சி சொல்லும்
இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
ஆண்: எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
ஆண் மற்றும் பெண்: வழி நெடுக காட்டுமல்லி