என்னை கொல்லாதே

Ennai Kollathey Lyrics in Tamil
Movie: Geethaiyin Raadhai(கீதையின் ராதை)
Music: Ztish
Singers: Kumaresh Kamalakannan and Keshvini Saravanan
Lyricist: Kavi Naayagan Yuwaji(கவி நாயகன் யுவாஜி)

Ennai Kollathey Lyrics in Tamil

ஆண்: என்னை கொல்லாதே
தள்ளிப் போகாதே
நெஞ்சைக் கிள்ளாதே
கண்மணி

ஆண்: சொன்ன என் சொல்லில்
இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள்
சொல்லடி

ஆண்: உன்னைத் தீண்டாமல்
உன்னைப் பார்க்காமல்
கொஞ்சிப் பேசாமல்
கண்ணில் தூக்கமில்லை

ஆண்: என்னுள் நீ வந்தாய்
நெஞ்சில் வாழ்கின்றாய்
விட்டுச் செல்லாதே
இது நியாயமில்லை

பெண்: கண்ணை மூடி கொண்டாலும்
உன்னைக் கண்டேன்
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்

பெண்: வெள்ளை மேகத் துண்டுக்குள்
எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் மின்னல்

பெண்: என் இதழ் மேல் இன்று
வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே
நூறு எண்ணங்கள்

பெண்: சொன்ன சொல்லின் அர்த்தங்கள்
என்னுள் வாழுதே
தூரம் தள்ளிச் சென்றாலும்
உயிர் தேடுதே

பெண்: ஆசை வார்த்தை எல்லாமே
இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில்
பாயச் செய்கிறாய்

பெண்: என்னுள் நீ வந்தாய்
இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லாலே
தூரம் உண்டாக்கினாய்

பெண்: என்னைத் தீண்டாதே
என்னைப் பார்க்காதே
ஒன்றும் பேசாதே
போதும் துன்பங்கள்

குழு: திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா

குழு: திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா

ஆண்: என்னை விட்டுச் செல்லாதே
எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே

ஆண்: உன்னை மட்டும் நேசித்தேன்
இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்

ஆண்: என் உயிர் காதலை
உந்தன் காதோரம்
ஒரு முறையாவது
சொல்ல நீ வேண்டும்

ஆண்: எந்தன் ஆசை முத்தங்கள்
உன்னைச் சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள்
இன்னும் நீளுமோ

ஆண்: உந்தன் கண்ணில் நீ சிந்தும்
ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே
என்னை பாரடி

ஆண்: என்னைக் கொள்ளாதே
தள்ளிப்போகாதே
நெஞ்சைக்கிள்ளாதே
கண்மணி

ஆண்: சொன்ன என் சொல்லில்
இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

ஆண்: என்னைக்கொல்லாதே
தள்ளிப்போகாதே
நெஞ்சைக்கிள்ளாதே கண்மணி

ஆண்: சொன்ன என் சொல்லில்
இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி