என்ன சொல்ல போகிறாய்

Enna Solla Pogirai Lyrics in Tamil
Movie: Kandukondain Kandukondain(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
Music: A. R. Rahman
Singer: Shankar Mahadevan
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Enna Solla Pogirai Lyrics in Tamil

ஆண்: இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்

ஆண்: இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

ஆண்: சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா

ஆண்: காதலின் கேள்விக்கு
கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

ஆண்: அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே

ஆண்: இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்

ஆண்: இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

ஆண்: சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா

ஆண்: காதலின் கேள்விக்கு
கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

ஆண்: அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே

ஆண்: இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்

ஆண்: இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

ஆண்: இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி

ஆண்: கண்ணாடி பிம்பம் கட்ட
கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

ஆண்: நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

ஆண்: இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்

ஆண்: இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

ஆண்: சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா

ஆண்: காதலின் கேள்விக்கு
கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

ஆண்: விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

ஆண்: இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

ஆண்: பல உலக அழகிகள் கூடி
உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

ஆண்: என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா நியாயமா

ஆண்: என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா மெளனமா
என்ன சொல்லப் போகிறாய்