Engeyo Partha Mayakkam Song Lyrics in Tamil
ஆண்: எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
ஆண்: இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
ஆண்: இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
ஆண்: கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
ஆண்: அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே
ஆண்: என்னானதோ ஏதானதோ
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
ஆண்: கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விடைகள் இல்லா கேள்வி கேட்க
ஆண்: எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
ஆண்: ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெற்க்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான்
கண்டு கொண்டேன்
ஆண்: இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
ஆண்: வியந்து வியந்து
உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து
மிரண்டு மிரண்டு
ஆண்: இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து
தொலைந்து தொலைந்து