Enakkaaga Poranthaayae Lyrics in Tamil – Vaali
ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
ஆண்: உனக்கு மாலையிட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
ஆண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன்
என்ன ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
பெண்: உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
பெண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன்
என்ன ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்
பெண்: ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உன்னதான் ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சுல
பச்சைய குத்தி வச்சேன்
ஆண்: இதுதான்டி ரதம்
இதுல தான் நிதம்
உன்னதான் உட்கார வச்சி நான்
ராசாத்தி ராசா நான்
ஊர்கோலம் வந்திடுவேன்
பெண்: உன்னோடு நான் சேர
தின்னேனே மண் சோறு
நேந்துதான் சாமிக்கு
விட்டேனே வெள்ளாடு
ஆண்: ஆத்தோரம் காத்தாடும்
காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா
ஒன்னாகனும் நாளும்
பெண்: நீ மாலை இடும்
வேலை எது
கேட்குது என் தோளும்
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
ஆண் மற்றும் பெண்: உனக்கு மாலையிட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்