எனதுயிரே

Enadhuyire Song Lyrics in Tamil
Movie: Bheemaa(பீமா)
Music: Harris Jayaraj
Singers: Chinmayi, Sadhana Sargam and Nikhil Mathew
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Enadhuyire Song Lyrics in Tamil

பெண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

பெண்: நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே

பெண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்: இனி இரவே இல்லை கண்டேன்
உன் விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை அன்பே
உன் உளறலும் எனக்கு இசை

பெண்: உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனாய் நல்ல ஓவியம்
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்

ஆண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

பெண்: மரம் இருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்

ஆண்: இனி மேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம்
துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே
நீ என் வாழ்வின் மோட்சமே

பெண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்: நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே