என் ஜன்னல் வந்த காற்றே

Song Name: En Jannal Vandha
Movie: Theeradha Vilaiyattu Pillai(தீராத விளையாட்டுப்பிள்ளை)
Music: Yuvan Shankar Raja
Singers: Priya Himesh, Divya Vijay, Roshini and Pan Bundy
Year: 2009

En Jannal Vandha Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: ஓ ரப் ஒன்லி

பெண்: காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சல சல சல சல

பெண்: இசையே தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

பெண்: என் ஜன்னல் வந்த காற்றே
ஒரு தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும் வரவா

பெண்: என் வாசல் கோலம் பார்த்து
ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள
அட காற்றுக்கென்ன நாணம்

பெண்: நான் கால்கள் கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம்
நலமாக பாடும் ராகம்

பெண்: ஹே கவிதை கொஞ்சும் குயிலே
நீ பாட பாட சுகமா
உன் கையொப்பம்தான் கேட்டேன்
நான் மட்டும் தனியாய் வரவா

பெண்: காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சல சல சல சல

பெண்: இசையே தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

—பின்னணி இசை—

ஆண்: ஓ ரப் ஒன்லி

பெண்: ஹே சாக்லேட் பேபி நானே
இது டாலர் கொட்டும் மீனே
ஒற்றை தூக்கி ஒன்று
முழு உலகம் சுற்றுவேனே

பெண்: சடர்டே நான் நோ நோ
அட சன்டே நாளும் நோ நோ
நான் சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா நோ நோ

பெண்: நான் வெர்ஜின் பொண்ணு தானா
ஹே என்ன யாரும் கேட்டா
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அட வெட்கப்பட்டு போவேன்

பெண்: என் வயச யாரும் கேட்டா
நான் வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நான் மாட்டேன்னாவே மாட்டேன்

பெண் குழு: சோ வாட்
பெண்: என்ன ஊரே பாக்குது
பெண் குழு: சோ வாட்
பெண்: என் செல் நம்பர் தேடுது
பெண் குழு: சோ வாட்
பெண்: செம பிகர்னு சொல்லுது
பெண் குழு: சோ வாட்
பெண்: சும்மா பணம் விட ஏங்குது

பெண் குழு: சோ வாட்
பெண்: டாலர்ஸா குவியுது
பெண் குழு: சோ வாட்
பெண்: அட யூரோ அடிக்குது
பெண் குழு: சோ வாட்
பெண்: பிளாக் பிளாக் மணி பறக்குது
பெண் குழு: சோ வாட்
பெண்: எங்க பேங்க் மணி இருக்குது

—பின்னணி இசை—

பெண்: ஹே ரங்கா ரங்கா ரங்கா
இது தாவணி போட்ட மங்கா
இவகிட்ட வந்து கிங்கா
ஒரு ஆட்டம் போடு சிங்கா

பெண்: இது அல்லி ராணி பொண்ணு
என் மேல வைக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராதா மாப்பு
அட காத்து கெடக்கு ஆப்பு

பெண்: ஹே யக்கா யக்கா யக்கா
அட நீயும் நானும் சோக்கா
புது பாலிஷ் போட்ட தேக்கா
ஊர் பாட்டு கட்டு ரோக்கா

பெண்: இது எங்க எங்க ஆட்டம்
அழகான மல்லி தோட்டம்
இது எங்க எங்க கூட்டம்
ஒரு கில்லி தாண்டு ஓட்டம்

பெண் குழு: சோ வாட்
பெண்: ஹே குத்தடி குத்தடி
பெண் குழு: சோ வாட்
பெண்: சும்மா கூடி குத்தடி
பெண் குழு: சோ வாட்
பெண்: ஹே கும்மடி கும்மடி
பெண் குழு: சோ வாட்
பெண்: கண்ண பாத்து வையடி

பெண் குழு: சோ வாட்
பெண்: ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்
பெண் குழு: சோ வாட்
பெண்: ஹே ஆணுக்கும் ஆணுக்கும்
பெண் குழு: சோ வாட்
பெண்: ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும்

பெண் குழு: சோ வாட்
பெண்: ஹே தானன னானன

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team