Chinna Chinna Kangal Lyrics in Tamil
பெண்: சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ
கருவறை மீண்டும்
மணக்கிறதோ
பெண்: எட்டு வைத்து வானம்
வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ
பெண்: கண்ணே இனி ஒரு போதும்
பிரிவே இல்லை
பிஞ்சே நீ ஒரு கோடி
தாயின் பிள்ளை
பெண்: உறவெல்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இருள் எல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க
பெண்: வாராத மாமணியாய்
வந்தாயே உய்வாக
மனசெல்லாம் ஒளி வீச
உன் மீசை கூட மழலை பேச
பெண்: சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ
கருவறை மீண்டும்
மணக்கிறதோ
பெண்: எட்டு வைத்து வானம்
வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ
ஆண்: மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை
ஆண்: யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில்
ரத்த பந்தம் போல் பலமில்லை
வா எழுந்திடு வாள் சுழற்றிடு
வான் கிழித்திடு பயமில்லை
ஆண்: கீச்சை மறந்துப்போன
கிளியின் மௌனம் போல
இதயம் தவித்த போது
நீ இசையாய் உள்ளே வந்தாயே
ஆண்: உறவில்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இருளெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க
ஆண்: தோழி உனைப் பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை
ரெட்டை ஜடை வாசனை
நீதானா நிஜம்தானா
ஆண்: வயதின் முதல் காதலா
வார்த்தை இல்லா வெய்யிலா
சாட்சி இல்லா சாரலா
நீ தானா நிஜம் தானா
ஆண்: அடி ஏதும் அறியா என் நெஞ்சில்
இறகாக விழுந்தாயே
காலம் பருவம் கடந்தாலும்
கலையாமல் நின்றாயே
ஆண்: போவோம் பல நாட்கள்
பின்னே பின்னே
வாழ்வோம்
நாம் வளராத பிள்ளை போலே
பெண்: சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ
கருவறை மீண்டும்
மணக்கிறதோ
பெண்: எட்டு வைத்து வானம்
வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ