Azhage Brammanidam Lyrics in Tamil
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்: ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன்
என்று நானும் சொல்லி வந்தேன்
ஆண்: என் ஆசை நிறைவேறுமா
என் தோழி நீயும் சொல்லம்மா
பெண்: நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்: உன்னை நான் சுமப்பதினால்
இதயமும் கருவறைதான்
மனதால் நானும் அன்னையே
மறவேன் என்றும் உன்னையே
பெண்: நான் பாலைவனத்தின் விதை போல்
நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே
ஆண்: உன் விழி திறந்திருந்தால்
விடியலே தேவை இல்லை
பெண்: உன்னை நான் துறந்திருந்தால்
உயிர் அது சொந்தம் இல்லை
ஆண்: இத்தனையும் இனி கிடைக்குமா
பெண்: கிடைக்கும் கிடைக்கும்
நான் கூட சொல்கிறேன்
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்: ஏன் இந்த பிறவி என்று
இது வரை நினைத்திருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும்
உலகே புதியதானதே
பெண்: என்னை படைத்த அந்த தெய்வம்
என்னை சுமந்த அன்னை தெய்வம்
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்
ஆண்: பருவங்கள் ஓடிப்போகும்
உருவங்கள் மாறிப்போகும்
பெண்: உன் மீது கொண்ட காதல்
உயிரையும் தாண்டி வாழும்
ஆண்: சொன்னதெல்லாம் இனி நடக்குமா
பெண்: நடக்கும் நடக்கும் நான்
கூட சொல்கிறேன்
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்: ஆண்டு பல காத்திருக்க வேண்டும்
என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன்
என்று நானும் சொல்லி வந்தேன்
ஆண்: என் ஆசை நிறைவேறுமா
என் தோழி நீயும் சொல்லம்மா
பெண்: நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்