Arachcha Santhanam Lyrics in Tamil
குழு: செம்பவழ முத்துக்கள
சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை
போட்டிருக்கும் முத்தினமே
குழு: வாய் திறந்து நீ சிரிச்சா
பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா
தோத்து விடும் இத்தனையும்
ஆண்: அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
ஆண்: முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
ஆண்: அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
ஆண்: பூவடி அவ பொன்னடி
அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி
அவ தேவலோக ராணி
ஆண்: தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ஆண்: ரத்தினம் கட்டின பூந்தேரு
உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ
ஆண்: அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
ஆண்: முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
ஆண்: அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
ஆண்: மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஆண்: ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்
ஆண்: மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ
ஆண்: அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
ஆண்: முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
ஆண்: அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே