Anthaathi Lyrics in Tamil – 96
பெண்: பேரன்பே காதல்
ஆண்: உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா
ஆண்: ஆறாத ஆவல்
பெண்: ஏதேதோ சாயல் ஏற்று
திரியும் காதல்
ஆண்: பிரத்யேக தேடல்
பெண்: தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில் உளதில் இளதில்
ஆண்: தானே எல்லாமும் ஆகி
நாம் காணும் அருவமே
ஆண் மற்றும் பெண்: இத்யாதி காதல்
இல்லாத போதும் தேடும் தேடல்
சதா
மாறாது காதல் மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாது ஊடல்
குழு: ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆ
குழு: ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆ
ஆண்: நாம் இந்த தீயில்
பெண்: வீடு கட்டும் தீக்குச்சி
ஆண்: நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி
ஆண்: நாம் இந்த நீரில்
பெண்: வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
ஆண் மற்றும் பெண்: நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி
ஆண் மற்றும் பெண்: காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் டைரி
ஆண் மற்றும் பெண்: காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற டிகிரி
குழு: ஓர் விடைக்குள்யே
வினாவெல்லாம் பதுங்குதே
ஆஆஆ
குழு: நாம் கரைந்ததே
மறைந்ததே முடிந்ததே
ஆஆஆ
பெண்: ஆஆஆ
கொஞ்சும் பூரணமே வா
நீநீநீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
குழு: காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்
குழு: காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ
குழு: ஆஆஆ திகம்பரி
வலம்புரி சுயம்பு நீ நீ
குழு: ஆஆஆ பிரகாரம் நீ
பிரபாபம் நீ பிரவாகம் நீ நீ
குழு: ஆஆ சிருங்காரம் நீ
ஆங்காரம் நீ ஓங்காரம் நீ நீ
குழு: நீ அந்தாதி நீ
அந்தாதி நீ அந்தாதி நீ நீ
ஆண்: தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும்
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்
ஆண்: காதல் காதல் ஒரு நாள்
உங்களையும் வந்து அடையும்
அதை அள்ளி அணைத்து கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
காதல் தங்கும் காதல் தயங்கும்
காதல் சிரிக்கும் காதல் இனிக்கும்
ஆண்: காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும் காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும் காதல் பிரியும்
ஆண்: கதவுகளை மூடாமல்
வழி அனுப்புங்கள் காத்திருங்கள்
ஒரு வேலை காதல் திரும்பினாள்
தூரத்தில் தயங்கி நின்றால்
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்
ஆண்: போதும்
காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்