அன்பென்ற மழையிலே

Anbendra Mazhayile Lyrics in Tamil
Movie: Minsara Kanavu(மின்சார கனவு)
Music: A. R. Rahman
Singer: Anuradha Sriram
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Anbendra Mazhayile Lyrics in Tamil

பெண்: அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

பெண்: வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

பெண்: விண்மீன்கள் கண்பாா்க்க
சூாியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே

பெண்: கண்ணீாின் காயத்தை
செந்நீாில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

பெண்: அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
பெண் குழு: அதிரூபன் தோன்றினானே

பெண்: போா்கொண்ட பூமியில்
பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே
பெண் குழு: புகழ்மைந்தன் தோன்றினானே

பெண்: கல்வாாி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே

பெண்: நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே

பெண்: இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே

பெண்: அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
பெண் குழு: அதிரூபன் தோன்றினானே

பெண்: வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
பெண் குழு: வந்தவன் மின்னினானே

பெண்: அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
பெண் குழு: அதிரூபன் தோன்றினானே

பெண்: வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
பெண் குழு: வந்தவன் மின்னினானே

Youtube video

Other Songs From Minsara Kanavu Album

Lyrics Added by Padalvarigal Team