Anbe En Anbe Lyrics in Tamil
ஆண்: அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
ஆண்: கனவே கனவே
கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
ஆண்: கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ
ஆண்: மழையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
ஆண்: கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
ஆண்: எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு
ஆண்: அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
ஆண்: கனவே கனவே
கண் உறங்காமல்
ஆண்: கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்