Anbe Anbe Kollathe Lyrics in Tamil
ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
ஆண்: பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
ஆண்: சற்றே நிமிர்ந்தேன்
தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
ஆண்: மின்னலைப் பிடித்துத்
தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
ஆண்: நூறடிப் பளிங்கை
ஆறடி ஆக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
ஆண்: இதுவரை மண்ணில்
பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
ஆண்: இத்தனை அழகும்
மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண் குழு: கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
பெண் குழு: கொடுத்து வைத்த கால்கொலுசே
கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா
ஆண்: அழகிய நிலவில்
ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
ஆண்: உன்னுயிர் காக்க
என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உனையிடுவேன்
ஆண்: மேகத்தைப் பிடித்து
மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத்
தூங்க வைப்பேன்
ஆண்: தூக்கத்தில் மார்பில்
வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு
நான் துடைப்பேன்
ஆண்: பால் வண்ணப் பறவை
குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
ஆண்: தேவதை குளித்த
துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
ஆண்: பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே
ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே