Aga Naga Song Lyrics in Tamil
பெண்: அகநக அகநக
முகநகையே ஓ
முகநக முகநக
முருநகையே ஓ
பெண்: முறுநக முறுநக
தருநகையே ஓ
தருநக தருநக
வருநனையே ஓ
பெண்: யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
பெண்: நடை பழகிடும்
தொலை அருவிகளே ஓ
முகில் குடித்திடும்
மலை முகடுகளே ஓ
பெண்: குடை பிடித்திடும்
நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும்
சிறு மலர்த்தூளியே
பெண்: அழகிய புலமே
உனதிள மகள் நான்
வளவனின் நிலமே
எனதரசியும் நீ
பெண்: வளநில சிரிப்பே
எனதுயிரடியோ
உனதிளம் வனப்பே
எனக்கினிதடியோ
உனை நினைக்கையிலே
மனம் சிலிர்த்திடுதே
பெண்: உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவி தவிக்கிறதே
நினைவழிந்திடுதே
பெண்: அகநக அகநக
முக நகையே ஓ
முகநக முகநக
முருநகையே ஓ
பெண்: முறுநக முறுநக
தருநகையே ஓ
தருநக தருநக
வருநனையே ஓ
பெண்: யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
பெண்: யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது