Adiye Un Kangal Lyrics in Tamil
ஆண்: அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேசம் என்றால்
நான்தான் கேஷ்ட்ரோவா
ஆண்: அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா
ஆண்: ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க
ஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை மாற்றாதே
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே
ஆண்: அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேசம் என்றால் நான்
தான் கேஷ்ட்ரோவா
ஆண்: அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா
ஆண்: ஆள் கொல்லும் சேனைக்கொண்ட
ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்றை
பின்னால் நின்றுத்தாக்காதே
பெண்: மாவீரா முன்னால் நின்று
உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு
மாயமாகிப்போகாதே
ஆண்: மறைவேனா நானே
நான் தீயைத்தின்று வாழும் பச்சி
போடி சும்மா வத்திக்குச்சி
பெண்: விடுவேனா நானே
நான் கொஞ்சி கொஞ்சி கொல்லும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி
ஆண்: ஏய் வேட்டைக்காரி காதல் காட்டில்
நாளை மீளும் வேங்கை ஆட்சி
பெண்: பதுங்காமல் என் மீது பாயும்
புலி போல ஆகாதே நீயும்
கிளிப்போல ஆனேனே நானும்
யாழும் வாலும் மோதாமல் மோதும்
ஆண்: அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேசம் என்றால்
நான்தான் கேஷ்ட்ரோவா
ஆண்: அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா
பெண்: நூற்றாண்டு காலம் முன்பு
முழுகிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே அன்று
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே
ஆண்: ஏகாந்த தீவில் இன்று
ஏவல் போல ஏஞ்சல் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று
காற்றும் சொல்லக்கேட்டேனே
பெண்: அமேசான் காடு
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி
பெண்: ஆரோவில் வீடு
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி
தங்கும் ஆசை வந்துடுச்சி
ஆண்: நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்
தூக்கம் போயேப்பேச்சு
பெண்: ஹோ விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர்க்கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க
ஆண்: அடியே உன் கண்கள்
ரெண்டும் மேடின் க்யூபாவா
அதிலே என் தேசம் என்றால்
நான் தான் கேஷ்ட்ரோவா
ஆண்: அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா