Adiye Neethaaanadi Lyrics in Tamil
ஆண்: அடியே நீதானடி
என் போதைத் தேனே
முத்தம் கொஞ்சு
ஆண்: சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
ஆண்: பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம் விட்டு செல்லாதே
ஆண்: கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே
ஆண்: பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
ஆண்: கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னைக் கொல்லாதே
ஆண்: இரவுகள் நீள இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே
யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே
ஆண்: சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன்
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே மனமதுவே
ஆண்: ஏ அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
ஆண்: சகியே நீ யாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
குழு: பெண்ணே பெண்ணே
ஆண்: உந்தன் கையில் நானும்
குழு: கூடும் நேரம்
ஆண்: என்னை விட்டுச் செல்லாதே
குழு: கண்ணே கண்ணே
ஆண்: நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே
குழு: பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
குழு: கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னைக் கொல்லாதே
குழு: பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
குழு: கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
ஆண்: இரவின் குளிரே என்னைக் கொல்லாதே