Adi Penne Lyrics in Tamil
ஆண்: அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே
மழை அடிக்கும்
ஆண்: அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே
மழை அடிக்கும்
பெண்: ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
பெண்: அதை விழியில் கோர்த்து
உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
ஆண்: ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே
வாசம் பிறந்ததோ
பெண்: வேர்வைத் துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில்
பாவம் அழியுதோ
ஆண்: இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன் உயிரிலே
பெண்: இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
ஆண்: அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்
பெண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
பெண்: உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: என் அன்பே ஒரு முறை
நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ
புது மயக்கம்
பெண்: என் அன்பே
ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ
புது மயக்கம்
ஆண்: எனது பிறவியின்
அர்த்தம் உணரவே
உன்னை எனது
வாழ்வில் தந்ததோ
பெண்: தேகம் தீண்டும்
தூரம் இருந்துமே
உனது விழியிலே
ஜீவன் தொலையுதோ
பெண்: மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்துக் கொண்டிடு உயிரிலே
ஆண்: விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
பெண்: அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
ஆண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
ஆண்: அடிப் பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழை அடிக்கும்
பெண்: என் அன்பே
ஒரு முறை நீ ரசித்தால்
என் உள்ளே ஏதோ
புது மயக்கம்
ஆண்: நீ இரவல் உயிரா
உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
ஆண்: நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா