Aalappol Velappol Lyrics in Tamil
பெண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
பெண்: நாலப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
பெண்: பதில் கேளு அடி கண்ணம்மா
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்
பெண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
பெண்: எம்மனசு மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு
ஆண்: கொத்து மஞ்சள்தான் அரைச்சி
நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்த
நெத்தியில சூடச் சொல்லு
பெண்: சொன்னத நானும் கேக்குறேன்
சொர்ணமே அங்க போய் கூறிடு
ஆண்: அஞ்சல மாலை போடுறேன்
அன்னத்தின் காதுல ஓதிடு
பெண்: மாமன் நெனப்புத்தான்
மாசக்கணக்கிலே
பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச பெண்ணையே
ஆண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுது போல்
ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே
பெண்: நாலப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
ஆண்: வேலங்குச்சி நான் வளைச்சு
வில்லு வண்டி செஞ்சி தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்
பெண்: ஆலங்குச்சி நான் வளைச்சு
பல்லக்கொன்னு செஞ்சு தாரேன்
பல்லக்குல மாமன் வந்தா
பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்
ஆண்: வட்டமாய் காயும் வெண்ணிலா
கொல்லுதே கொல்லுதே ராத்திரி
பெண்: கட்டிலில் போடும் பாயும்தான்
குத்துதே குத்துஊசி மாதிரி
ஆண்: ஊரும் உறங்கட்டும்
ஓசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவேன்
புதுபாட்டா படிச்சி தருவேன்
பெண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
பெண்: நாலப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
ஆண்: பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்
ஆண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
பெண்: நாலப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே