Aalaporaan Thamizhan Lyrics in Tamil
பெண் குழு: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான்
மீச முறுக்கு ஹோய்
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு
ஆண் குழு: முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்க்குன்னே வாழு கண்ணு
அப்பனுக்கும் சம்மதம்
ஆண் குழு: எந்த எடம் வலி கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
ஆண் குழு: ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான்
இனிமே எல்லாமே
ஆண் குழு: வீரன்னா யாருன்னு
இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய அவன் தந்தானே
ஆண் குழு: ஹேய் ஹேய்
சொல்லிச் சொல்லி
ஆண்: சரித்திரத்தில் போ் பொறிப்பான்
ஆண் குழு: நெஞ்சில் அள்ளி
ஆண்: காத்தில் நம்ம
தேன் தமிழ்தெளிப்பான்
ஆண் குழு: இன்னும்
ஆண்: உலகம் எழ
ஆண் குழு: தங்க
ஆண்: தமிழப்பாட
ஆண் குழு: பச்சத்தமிழ் உச்சிப்புகழ்
ஏறி சிறக்கும்
ஆண்: வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா
பெண் குழு: சுளுக்கெடுப்போம்
ஆண்: தமிழன்டா எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்
ஆண் குழு: சொன்னாலே திமிரேறும்
ஆண்: காத்தோட கலந்தாலும்
அதுதான் உன் அடையாளம்
ஆண் குழு: அதுதான் உன் அடையாளம்
ஆண்: ஹே அன்பைக் கொட்டி
எங்கமொழி அடித்தளம்
ஆண் குழு: போட்டோம்
ஆண்: லகுனத்த தரிக்கிற ழகரத்தை
ஆண் குழு: சோ்த்தோம்
ஆண்: தலைமுறை கடந்துமே விரிவத
ஆண் குழு: பாத்தோம்
ஆண்: உலகத்தின் முதல்மொழி உசுரென
ஆண் குழு: காத்தோம்
ஆண்: நாள்நகர மாற்றங்கள் ஏதும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிழைய தமிழன்னு வருவான்
தாய்த்தமிழ் தூக்கி நிப்பானே
ஆண் குழு: கடைசித் தமிழனின்
ரத்தம் எழும் வீழாதே
ஆண்: தமிழினமே வீழாதே
தமிழினமே
பெண்: நெடுந்தூரம் ஓன் இசை கேட்கும்
பிறை நீட்டி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான் உயிர் அழியும்
உன் நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்
ஆண் குழு: முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழத்தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
ஆண் குழு: எந்த எடம் வலி கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
ஆண் குழு: ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான்
இனிமே எல்லாமே
ஆண் குழு: வீரன்னா யாருன்னு
இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய அவன் தந்தானே ஹே
ஆண்: வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா
பெண் குழு: சுளுக்கெடுப்போம்
ஆண் குழு: தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும்
தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும்