தனிமையே தனிமையே

Thanimaiye Lyrics in Tamil
Movie: Aarathu Sinam(ஆறாது சினம்)
Music: S. Thaman
Singer: Vijay Yesudas
Lyricist: Viveka(விவேகா)

Thanimaiye Lyrics in Tamil

ஆண்: தனிமையே தனிமையே
உனக்கென்ன இத்தனை தாகம்

ஆண்: நினைவினால் நனைகிறேன்
இது என்ன மந்திர மாயம்

ஆண்: தன்னால் ராட்டினம் போலே
மனம் உன்னை சுற்றுது நாளும்
சொன்னால் கேட்டிட மாட்டேன்
எனக் கண்ணில் கசியுது ஈரம்

ஆண்: உள்ளம் வெள்ளக் காடானது
உந்தன் நினைவே ஓடம்
வண்ணம் பூசிய நாட்கள்
அதை எண்ணிக் காலம் ஓடும்

ஆண்: வா வா அருகே வா வா
கனவே வா வா உயிரே வா மூச்சுக்காற்றே
வா வா அருகே வா வா
கனவே வா வா உயிரே வா வா மூச்சுக்காற்றே

ஆண்: தனிமையே தனிமையே
உனக்கென்ன இத்தனை தாகம்

ஆண்: மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஓய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்

ஆண்: விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை மீறிய காலம்
எண்ணும் போதே ஏனிந்த
நெஞ்சம் போடுது தாளம்

ஆண்: எங்கே நீயோ அங்கே நானும்
வேண்டும் என்று தோன்றுதே

ஆண்: வா வா அருகே வா வா
கனவே வா வா உயிரே வா மூச்சுக்காற்றே
வா வா அருகே வா வா
கனவே வா வா உயிரே வா வா மூச்சுக்காற்றே

ஆண்: தனிமையே தனிமையே
உனக்கென்ன இத்தனை தாகம்

ஆண்: சிறகின் சுவடு காற்றில் எய்து
பறவை திசையை அறிந்திட
பறந்து போன வசந்தம் தேடி
இதயம் இங்கே உருகிட

ஆண்: பிஞ்சுக் கைகள் தீண்டாமல்
நெஞ்சு சில நொடித் தேம்பும்
எந்தன் தேவதை கொஞ்சும் மொழி
எங்கே என மனம் ஏங்கும்

ஆண்: எங்கே முடிவென காட்டாமல்
எந்தன் சாலைகள் போகுதே

ஆண்: வா வா அருகே வா வா
கனவே வா வா உயிரே வா மூச்சுக்காற்றே
வா வா அருகே வா வா
கனவே வா வா உயிரே வா வா மூச்சுக்காற்றே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team