தாரமே தாரமே

Thaarame Thaarame Lyrics in Tamil
Movie: Kadaram Kondan(கடாரம் கொண்டான்)
Music: Ghibran
Singer: Sid Sriram
Lyricist: Viveka(விவேகா)

Thaarame Thaarame Lyrics in Tamil

ஆண்: வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

ஆண்: உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

ஆண்: தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திடச் சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

ஆண்: தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே

ஆண்: தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா

ஆண்: மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாயக்கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே

ஆண்: ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆழம் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

ஆண்: இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒருத்துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்

ஆண்: தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே

ஆண்: தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா

ஆண்: நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும் பாரம்
உன் கைத்தொடும் நேரம்
தீமீதிலும் ஈரம்

ஆண்: நீ நடக்கும் பொழுது
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது

ஆண்: பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும்
வாடக் கூடாது

ஆண்: உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது
உன்னை தாண்டி
எதுவும் தெரிய கூடாது

ஆண்: தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே

ஆண்: தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா