போ நீ போ

Po Nee Po Lyrics in Tamil
Movie: Moonu(மூனு)
Music: Anirudh Ravichander
Singers: Mohit Chauhan and Anirudh
Lyricist: Dhanush(தனுஷ்)

Po Nee Po Lyrics in Tamil

ஆண்: போ நீ போ போ நீ போ

ஆண்: தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

ஆண்: நீ தொட்ட இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ

ஆண்: இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட
விதி செய்தால் அன்பே போ

ஆண்: தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

ஆண்: உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர்க் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே

ஆண்: இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

ஆண்: போடி போ போடி போ

ஆண்: என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ

ஆண்: நீ தொட்ட இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ

ஆண்: இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ

ஆண்: தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ