Pala Palakura Lyrics in Tamil
ஆண்: பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
ஆண்: மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
ஆண்: சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
ஆண்: கூட்டைதான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
ஆண்: வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா
ஆண்: பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
ஆண்: மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
ஆண்: எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூா் இருக்கும்
ஆண்: கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூாியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
ஆண்: காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசோ்த்து
ஒரு மூட்டைகட்டி வா நீ வாநீ
ஆண்: பளபளக்குற பகலா நீ ஹாஹா
படபடக்குற அகலா நீ ஹாஹா
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ ஹே
ஆண்: மழையடிக்கிற முகிலா நீ ஹாஹா
திணறடிக்கிற திகிலா நீ ஹாஹா
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
ஆண்: இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடு வானம் வரை போய் வருவோம்
ஆண்: அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம்தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
ஆண்: என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்
ஆண்: பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
ஆண்: மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
ஆண்: சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
ஆண்: கூட்டைதான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
ஆண்: வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா