Neelothi Lyrics in Tamil
ஆண்: என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
ஆண்: மூசாவ தேடி ஈசன் கிட்ட
துவாவம் செஞ்சி வணங்குனேன்
இருட்டறையிலதான் இருந்தவன்
வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ
பெண்: உன் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
—பின்னணி இசை—
பெண்: பக்க துணை நானும் உண்டு
நெஞ்சின் வலி ஆத்திக்க
நேந்து கிட்ட சாமி கிட்ட
எஞ்சாமிய பாத்துக்க
ஆண்: எண்ணம் போல வாழ்க்கை
நம்பிக்கையா போய் வா
நான் வருவேன் நான் வருவேன்
அது வரை நெனப்புல கலங்காத
ஆண்: என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
—பின்னணி இசை—
ஆண்: நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னு
நெஞ்சம் கெடந்து ஏங்குதே
படச்ச சாமி கேக்காததையும்
படிச்ச சாமி கேட்டதே
ஆண் மற்றும் பெண்: எல்லாரையும் போல
நல்லாருப்போம் நாளை
நீதி தரும் சேதி வரும்
நமக்குண்டு அழகிய எதிர் காலம்
பெண்: உன் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
பெண்: மூசாவ தேடி ஈசன் கிட்ட
துவாவம் செஞ்சி உருகுறேன்
ஆண் மற்றும் பெண்: இனி தடையில்ல ஒரு கொடைக்குள்ள
வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே
ஆண்: என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
