Mainaave Mainaave Lyrics in Tamil
ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம் கேட்கும்
பாடல் நீதானா ஹே
ஆண்: மைனாவே மைனாவே
என் கண்கள் பூமியில் தேடிய
தேடல் நீதானா
ஆண்: விண்மீனாய் தொலைந்த மகள்
வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
ஆண்: பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா
ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம் கேட்கும்
பாடல் நீதானா
ஆண்: மைனாவே மைனாவே
என் கண்கள் பூமியில் தேடிய
தேடல் நீதானா
ஆண்: நீ போன காலம் தொட்டு
என் வாழ்வில் பகலே இல்லை
இருளோடு உன்னை தேடி
இளைத்துவிட்டேன்
பெண்: திசைக்கொன்றாய் தேடி செல்ல
விழி நான்கு இல்லை என்று
கண்ணீரை சிந்தி சிந்தி
கரைந்துவிட்டேன்
ஆண்: பிரிந்தோம்
அன்று துளியாக
இணைந்தோம்
இன்று நதியாக
பெண்: நீரின் தாகம்
நீரால் தீர்ந்தது
ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம் கேட்கும்
பாடல் நீதானா
பெண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம் கேட்கும்
பாடல் நீதானா
பெண்: சில்லென்ற முத்தம் ஒன்று
செல் எல்லாம் நனையும் போது
உள்ளுக்குள் அச்ச பூக்கள்
உதிர்கின்றதே
ஆண்: தேரோடு பூவனம் ஒன்று
வாரோடு சரியும் போது
அணுவெல்லாம் ஆகாயம் போல்
பிரிகின்றதே
பெண்: தேகம் ரெண்டும் பிரியாதா
ஜீவன் எரியும் சுடராக
ஆண்: முத்தம் என்னும்
எண்ணெய் ஊற்றுவோம்
ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம் கேட்கும்
பாடல் நீதானா
பெண்: மைனாவே மைனாவே
என் கண்கள் பூமியில் தேடிய
தேடல் நீதானா
ஆண்: விண்மீனாய் தொலைந்த மகள்
வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
ஆண்: பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா