கால் முளைத்த பூவே

Kaal Mulaitha Poove Lyrics in Tamil
Movie: Maattrraan(மாற்றான்)
Music: Harris Jayaraj
Singers: Javed Ali and Mahalakshmi Iyer
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி)

Kaal Mulaitha Poove Lyrics in Tamil

ஆண்: கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

ஆண்: கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்

ஆண்: அசையும் அசைவில்
மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய
உயிரை உரசி அனலை எழுப்ப
எரியும் வெறியை தெறித்தாய்

பெண்: வால் முளைத்த காற்றே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

ஆண்: நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே

பெண்: தலைகள் குனிந்ததோ
மமதை அழிந்ததோ
கடமை முடிந்ததோ
பிறந்த நொடியிலே

ஆண்: ஹே பெண்ணே
உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா வினவுகிறேன்

ஆண்: கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

பெண்: இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே

ஆண்: நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ

பெண்: எனை ஏனோ உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்

ஆண்: கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

ஆண்: கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்

ஆண்: அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்

ஆண்: அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்

Other Songs From Maattrraan