Fire Song Lyrics in Tamil
ஆண்: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
ஆண்: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே
ஆண்: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
ஆண்: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே
ஆண்: மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
யாமே யாமே
ஆண்: என் தோன்றா காலத்தே
எண்ணிக்கை பார்த்தக்குடி
யாமே யாமே
ஆண்: ஆதித்தீ சுடரவெல்லாம்
அணையாமல் பார்த்தக்குடி
தீமென்று தீதின்று
தீக்காடாய் வாழும் குடி
ஆண்: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
ஆண்: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா
ஆண்: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
ஆண்: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே
ஆண்: இடி இடித்தது மழையடித்தது
அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது
எழுந்தது பிரளயம்
ஆண்: கல்லோடும் முள்ளோடும்
காற்றோடும் போராடி
பல்லாண்டு வாழும் இனம்
ஆண்: பொறி விழுந்தது
வனம் எரிந்தது
எரிந்தது நதியும்
ஆண்: முகில் கரைந்தது
நிலம் சரிந்தது
திரிந்தது பருவம்
ஆண்: அங்கார கூத்தாடி
அனலுக்குள் நீராடி
மேலேறி வந்த இனம்
பெண் குழு: வன்னிமரக் கிளை அதிர
வாரணங்கள் அணி திரள
கன்னிமூல கவுளியொன்னு
காலம் சொல்லுதே
பெண் குழு: வெப்பலையில் சொட்டும் அந்த
வென்குருதி பாக்கையில
வீச்சருவா வேல்கம்பு
வேகம் கூடுதே
பெண் குழு: சொணையருவி பாறாங்கல்லு
மேலிருக்கும் தீக்குருவி
குரலெடுத்து கத்துதம்மா
தெற்கு திசையில
பெண் குழு: சென புடிச்ச காட்டு நரி
கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பெரும் நெருப்ப
பார்த்த நொடியில
ஆண்: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
பெண் குழு: வா வா
ஆண்: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா
ஆண்: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
ஆண்: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே