ப்ரஹ்மகலஷா

Brahmakalasha Lyrics in Tamil
Movie: Kantara: Chapter 1(காந்தாரா: சாப்டர் 1)
Music: B. Ajaneesh Loknath
Singer: Abby V
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி)

Brahmakalasha Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்:
அறியேனே சிவனே
உனைப் போற்றிட
அறியேனே சிவனே
உனைப் போற்றிட

ஆண்: அறியாமை அறிந்தே
எனை ஏற்றிடு
அறியாமை அறிந்தே
எனை ஏற்றிடு

ஆண்: உன்னுள்ளே என்றும் வாழ்பவனை
மாயத்தின் வாயில் வீழ்பவனை
நீயே காப்பாற்று

ஆண்: என்னை ஆழும் சிவனே
உனைப் போற்றினேன்

—பின்னணி இசை—

ஆண்: ஆடல் அரசனாடு
விரியும் மின்னல் உரையுதே
கங்கை தலையில் சூட
எரியும் சினமும் கரையுதே

ஆண்: தோன்றும் யாவுமே
அழியும் என்றனை
எந்தன் ஆனவம்
அழித்த சிவசக்தியே
என்றும் அழிந்திடா
எனது சிவபக்தியே

ஆண்: தேஹ ஶுத்திரனேனே புயாத்
தனுஷாந்தி ரனேனே புயாத்

ஆண்: பூவில் எனவே
ஆனேன் சிவனே
என்னுள் வரவே
கேட்டேன் சிவனே

ஆண்: பேரண்டம் எங்கும்
தீயாய் நீயே
என்னுள்ளம் ஏறி
நீ ஒளிவாயே

ஆண்: பற்று உள்ளோர் கையிலே
வெற்றி கொண்டு சேர்ப்பவன் நீயே சிவனே
என்னை ஆழும் சிவனே
உனைப் போற்றினேன்

—பின்னணி இசை—

ஆண் குழு: ஓம் சச்சிதானந்த பைரவாயா
மஹாருத பைரவாயா
மஹாசண்ட பைரவாயா
கால பைரவாயா
உன்மத்த பைரவாயா
கபால பைரவாயா
பீஷண பைரவாயா
சம்ஹார பைரவாயா
மகாகால பைரவாயா
மகாகால ருத்ராயா
நமோ நமஹ ஓம்

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Kantara: Chapter 1 Album

Lyrics Added by Padalvarigal Team