Bodhai Kaname Lyrics in Tamil
பெண்: அதோ பொன் பிறையா
உடைந்திடும் நுரையா
ஆண்: இதோ
என் நொடியின் வழிப்பறியா
பெண்: நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா
ஆண்: அங்கே தொலை தூரத்தில் சாரல்
மழை கண்டேன் நான் பக்கம்
வரும்போது சிறை கம்பியா
பெண்: தவறென பார்த்த கண் இன்று
கலை செய்யுதே
ஆண்: தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே
ஆண் மற்றும் பெண்: கண்கள் காரணம் தேடுதே
உன்னை வந்து சேருதே
குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ
போதை கணமே கணமே போதாதிரு நீ
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
குழு: நிஜமே நிஜமே நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ
குழு: தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ
ஆண்: நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனக்கென நீண்ட கிளையில் குயில் சேருதோ
பெண்: மரகத பொன் வேலையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ
ஆண்: கனாவின் ஓராமாக
இடாதா கோலமாக
பெண்: மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே
ஆண்: நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
பெண்: சுவைத்திருந்த மௌனம்
பொய் ஆகுதே
ஆண்: இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
பெண்: இருபதைத்தாண்டி
எதுவோ என் விரலாகுதே
ஆண் மற்றும் பெண்: என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே
குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ
போதை கணமே கணமே போதாதிரு நீ
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
குழு: நிஜமே நிஜமே நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ
குழு: தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ