Usure Pogudhey Lyrics in Tamil
ஆண்: இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஆண்: அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
ஆண்: உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
ஆண்: அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஆண்: ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
ஆண்: தவியா தவிச்சு
உசுர் தடம் கெட்டு திரியுதடி
தையிலாங் குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
ஆண்: இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா
ஆண்: சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே
ஆண்: உசுரே போகுதே
உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஆண்: மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
ஆண்: அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஆண்: இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள
விதி விலக்கில்லாத விதியுமில்ல
ஆண்: எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல
ஆண்: பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே
ஆண்: என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள
ஆண்: சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே
ஆண்: உசுரே போகுதே
உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஆண்: ஓஓ மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
ஆண்: அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஆண்: உசுரே போகுதே
உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஆண்: ஓஓ மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
ஆண்: அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி