Kallai Mattum Kandal Lyrics in Tamil
ஆண்: ஓம் நமோ நாராயணாய
ஆண்: கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
ஆண்: கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
ஆண்: எட்டில் ஐந்து எண் கழியும்
என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்சரம் பார்க்காது
ஆண்: ஊனக் கண்ணில் பார்த்தால்
யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால்
யாரும் சுற்றம்தான்
ஆண்: இல்லை என்று சொன்ன பின்பும்
இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள்
தில்லை மாறாது
குழு: இல்லை என்று சொன்ன பின்பும்
இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள்
தில்லை மாறாது
ஆண்: வீர சைவர்கள் முன்னால் எங்கள்
வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ஆண்: ராஜலெட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்
நான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜதா்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்
ஆண்: நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்
ஜோதி சாகாது
குழு: நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்
ஜோதி சாகாது
ஆண்: வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
ஆண்: சைவம் என்று பார்த்தால்
தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால்
சமயம் கிடையாது
ஆண்: கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது