யாா் அவள் யாரோ

யாா் அவள் யாரோ Yaar Aval Yaaro Lyrics in Tamil
Movie: Muppozhudhum Un Karpanaigal(முப்பொழுதும் உன் கற்பனைகள்)
Music: G.V. Prakash Kumar
Singer: Mohammed Irfan Ali

Yaar Aval Yaaro Lyrics in Tamil

ஆண்: யாா் அவள் யாரோ அவள் யாரோ
கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண்: வானின் புலம் தாண்டி
நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ

ஆண்: உன் மாா் மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி

ஆண்: ஓா் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும்
என் பக்கத்தில் நிற்பாள் அவள்

ஆண்: நான் வீழ்கின்ற நேரம்
பொன் கை ரெண்டும் நீளும்
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

ஆண்: நான் காலைப் பனி நீ புல்லின் நுனி
நான் வீழாமல் நீ தாங்கினாய்
நான் கேளா ஒலி நீதானே மொழி
என் ஓசைக்கு பொருளாகிறாய் ஓஹோ ஹோ

ஆண்: யாா் அவள் யாரோ அவள் யாரோ
கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண்: நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும்
என் அன்னை போல் காத்தாய் எனை

ஆண்: பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே
நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை

ஆண்: நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்
உன் அன்பன்றி வேறேதடி
ஓ பாரா முகம் நீ காட்டும் கணம்
நான் கூறாமல் சாவேனடி

ஆண்: யாா் அவள் யாரோ அவள் யாரோ
கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண்: வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ

ஆண்: உன் மாா் மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி

Other Songs From Muppozhudhum Un Karpanaigal Album