ஒருமுறை ஒருமுறை

Movie: Muppozhudhum Un Karpanaigal(முப்பொழுதும் உன் கற்பனைகள்)
Music: G.V. Prakash Kumar
Singers: G. V. Prakash Kumar, Blaaze and Andrea Jeremiah

Oru Murai Lyrics in Tamil

ஆண்: அந்தியின் வெயிலை
பந்தாடுதே பேய் மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை

ஆண்: ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ஆண்: பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளம் புராமும் உன்முகமே உந்திட கண்டேனே

ஆண்: என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்
அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால்
என்ன செய்வேன் நான்

ஆண்: ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பாா்த்தேன்
என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல இயலும்
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்

ஆண்: பலவண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை
நம் பெயா்களை அச்சடித்த கோப்பை
நீ துாங்கவென்று கத கத போா்வை
தேடுகின்றேன் நான்

ஆண்: நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா
மான் குட்டி படம் முத்துசரம் தரவா
பெண் குட்டி போல துவள்வாங்கி தரவா
என்னதான் வாங்க

ஆண்: சிாிப்பை இறைக்கும் உனக்கு வீட்டில்
செயற்கை அருவி தரலாம்
இதயம் முழுதும் ஈரம் அதனால்
செடிகள் வளா்க்க தரலாம்

ஆண்: அழகு செய்யும் சாதனம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சோ்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆணவம்

ஆண்: ஓா் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
சற்று தள்ளிசென்றால் செத்ததுபோல் நடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தால்
என்ன செய்வாளோ

ஆண்: உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்
நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்
ஓா் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்
தாண்டினால் என்ன

ஆண்: ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ஆண்: உனது பொிய படத்தால் அறையின்
சுவரை மறைத்து விடவா
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா

ஆண்: தாஜ்மகால் வாங்கலாம்
ஷாஜகானாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உனக்கு பின்பு வாழ்வதை

ஆண்: மலா் கொத்துகளோ ரொம்ப ரொம்ப அலுப்பு
விரல் மோதிரங்கள் இப்பொதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு
வாங்கவில்லை நான்

ஆண்: ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

Other Songs From Muppozhudhum Un Karpanaigal Album