ஓ சுனந்தா

ஓ சுனந்தா Oh Sunanda Lyrics in Tamil
Movie: Muppozhudhum Un Karpanaigal(முப்பொழுதும் உன் கற்பனைகள்)
Music: G.V. Prakash Kumar
Singers: Raman Mahadevan, Caroline, Megha, Nivas, Rahul Nambiar, Chinmayi, Jurrian and Daniëlle

Oh Sunanda Lyrics in Tamil

ஆண்: ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை

ஆண்: கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்

ஆண்: ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

ஆண்: மழை விழுகின்ற பொழுதினிலே
மயில் நடனங்கள் புாிகின்றதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலா் ஒரு புறம் சாிகிறதே

ஆண்: நேற்று நான் வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய்பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌா்ணமி ஆனதே

ஆண்: ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

ஆண்: துயில் கலைந்திடும் விழிகளிலே
புது தினங்களின் கனவுகளே
நவ மணிகளின் நடுவினிலே
தனி மரகத பவளங்களே

ஆண்: மின்மினி பூச்சிகள் கூடியே
பேசுதே நித்தமும் வம்புகள்
யாா் இவன் அன்னியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும் அம்புகள்

ஆண்: ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை

ஆண்: கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்

Other Songs From Muppozhudhum Un Karpanaigal Album