
Thoodha Song Lyrics in Tamil
ஆண்: சீதை அதின் வானிலே
சிறகுகள் காண்கிறேன்
எனக்கொரு தூது செல்லு தூதா
குழு: எனக்கொரு தூது செல் தூதா
ஆண்: அவளது காதிலே
உயிருடன் வாழ்கிறேன்
என ஒரு சேதி சொல் தூதா
குழு: என ஒரு சேதி சொல் தூதா
ஆண்: இசை நுழையாத கருங்குழியிலே
நெஞ்சம் தூங்குவதே
அவளது வீர நினைவிலே
அவளிடம் சென்று சொல்லடா
குழு: தூதா வண்ண தூதா
எந்தன் இதய துடிப்பை
நீயும் கொண்டு போ
குழு: தூதா சின்ன தூதா
உந்தன் சிறகின் அடிப்பின்
வேகம் கூட்டி போ
பெண்: தொலைவிலே
வேகும் வலி ஏன்
உணர்கிறேன் ஓ
இதயத்தின் மூளையின்
முடுக்கில் எல்லாம்
பெண்: தரை இதன் மீதிலே
சிறகுகள் காண்கிறேன்
பறந்திட வலிமை இல்லையா
பெண்: புயல் வழியோ
தரை வழியோ
விரைந்து நீ செல்லு தூது தா =
என் விழித்துளி
நீ சுமந்து போ
தூது சொல்லி வா
பெண்: உயிர் என்னும் சாரல்
எனில் சுரப்பதும்
நானும் சுவாசிப்பதும்
அவனினை மீண்டும் காணவே
வருகிறேன் என்று சொல்லடா
குழு: வருகிறேன் என்று சொல்லடா
பெண்: தூதா வண்ண தூதா
எந்தன் இதய துடிப்பை
நீயும் கொண்டு போ
பெண்: தூதா சின்ன தூதா
உந்தன் சிறகின் அடிப்பின்
வேகம் கூட்டி போ