Yen Paattan Saami Varum Song Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: என் பாட்டன் சாமி வரும்
எங்கேயும் கூட வரும்
என் தாயி தூங்க சொன்ன பாட்டு வரும்
எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும்
ஆண்: ஊரான ஊரு வரும்
முன்னோரின் பேரு வரும்
எங்கூரு கருப்பசாமி ஆடி வரும்
எங்கூரு கருப்பசாமி ஆடி வரும்
ஆண்: என் பாட்டன் சாமி வரும்
எங்கேயும் கூட வரும்
—பின்னணி இசை—
ஆண்: ராத்திரி வழி நெடுக
நெலவு வரும்
கத்திரி வெயில் கடக்க
கருடன் வருமே எஞ்சாமி
ஆண்: கோவில் செல கவுளி சொன்ன
சகுணம் வரும்
காளையும் வேப்பிலையும்
தொடர்ந்து வருமே எஞ்சாமி
ஆண்: ஆகாச பூமியெல்லாம்
ஆறுதலா கூட வரும்
அண்ணாந்து பாக்கயிலே தூறல் வரும்
ஆண்: ஒய்யார தூளி தந்த
ஆலமரம் கூட வரும்
ஆத்தோர கால் நடந்த சேறு வரும்
ஆண்: அம்மிக்கல்லும் கூட வரும்
ஆட்டுகள்ளும் கூட வரும்
அம்மனும் செம்மண்ணும்
எந்தொனையா கூட வரும்
ஆண்: ஏ என் பாட்டன் சாமி வரும்
எங்கயும் கூட வரும்
என் தாயி தூங்க சொன்ன பாட்டு வரும்
எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும்
ஆண்: ஊரான ஊரு வரும்
முன்னோரின் பேரு வரும்
எங்கூரு கருப்பசாமி ஆடி வரும்
எங்கூரு கருப்பசாமி ஆடி வரும்
எங்கூரு கருப்பசாமி ஆடி வரும்
எங்கூரு கருப்பசாமி ஆடி வரும்
—பின்னணி இசை—


