Kone Komaane Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண்: தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
பெண்: கள்ளம் இல்லா பண்பும்
வெள்ளம் போன்ற அன்பும்
உள்ளம் என்னும் பள்ளம் எங்கும்
தேடி தங்கும்
ஆண்: ஆடை சூட்டிய வைரம்
வாசம் வீசும் ஸ்வர்ணம்
வெட்டி பட்ட நிலவின் ஒளியை
தட்டி செய்த சிற்பம்
ஆண்: தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண்: ஏய் தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
—பின்னணி இசை—
ஆண்: ஓ கண்ணுடைய நிலவே நிலவே
என்னுடைய பொருளே பொருளே
அட உடலில் உயிர் போல் கடலில் அலை போல்
உடன் நீ உறைவாயா
பெண்: தீராத திருவே திருவே
செந்தமிழ் உருவே உருவே
நம் உடம்பை தொடரும் நிழல் தான்
என்றும் உடலை பிரியாதே
ஆண்: நூறுகோடி செல்வம் சிறிதாகும்
ஆறு முழம் பூவே பெரிதாகும்
உன் காலில் கொஞ்சும் கொலுசின் ஓசை
காலை இசை ஆகும்
ஆண்: வெள்ளை மானே ஹ்ம்ம்
கொள்ளை தேனே ஹ்ம்ம்
பெண்: ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண்: தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
—பின்னணி இசை—
பெண்: ஓ ஹோ
முத்து மணி மாலைகள் வேண்டாம்
பத்து விரல் மோதிரம் வேண்டாம்
எழுகிற பொழுது உன் இரு பாதம்
தொழும் வரம் தருவாயா
ஆண்: காற்று வந்து கை தட்ட வேண்டாம்
கவிதையே நீ புகழவும் வேண்டாம்
இல்லற மங்கை நல்லவன் என்றே
சொல்லிடும் சொல் போதும்
பெண்: கோடை மழை கொட்டும் மண்ணோடு
கோடி மழை கொட்டும் நம்மோடு
உன் வெற்றி காண ஒற்றை விண்மீன்
ஆவேன் உன்னோடு
பெண்: முத்து கோனே தித்தித்தேனே
பெண்: ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண்: ஹோ ஓ
தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
பெண்: கள்ளம் இல்லா பண்பும்
வெள்ளம் போன்ற அன்பும்
உள்ளம் என்னும் பள்ளம் எங்கும்
தேடி தங்கும்
ஆண்: நீ ஆடை சூட்டிய வைரம்
வாசம் வீசும் ஸ்வர்ணம்
வேட்டி பட்ட நிலவின் ஒளியை
தட்டி செய்த சிற்பம்
ஆண்: தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
—பின்னணி இசை—