Karigalan Kala Pola Lyrics in Tamil
ஆண்: கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண்: குழலில்ல குழலில்ல
தாஜ்மகால் நிழலு
ஆண்: சேவலோட கொண்டப் போல
செவந்திருக்குது உதடு
பெண்: உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
ஆண்: ஏய் பருத்தி பூவப்போல
பதியுது உன் பாதம்
பெண்: பாதம் இல்ல பாதம்
இல்ல பச்சரிசி சாதம்
ஆண்: ஏ வலம்புரி சங்கைப் போல
வழுக்குது உன் கழுத்து
பெண்: கழுத்து இல்ல கழுத்து இல்ல
கண்ணதாசன் எழுத்து
ஆண்: கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண்: குழலில்ல குழலில்ல
தாஜ்மகால் நிழலு
ஆண்: சேவலோட கொண்ட போல
செவந்திருக்குது உதடு
பெண்: ஏ உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
ஆண்: ஏய் பால வளைவு போல
உள்ளதடி மூக்கு
பெண்: மூக்கு இல்ல மூக்கு இல்ல
முந்திரி முந்திரி கேக்கு
ஆண்: ஊதி வச்ச பலூன் போல
உப்பிருக்கு கன்னம்
பெண்: கன்னம் இல்ல கன்னம் இல்ல
வெள்ளி வெள்ளி கிண்ணம்
ஆண்: மருதாணி கோலம் போட்டு
மயக்குது தேகம்
பெண்: தேகம் இல்ல தேகம் இல்ல
தீ புடிச்ச மேகம்
ஆண்: மாராப்பு பந்தலில
மறைச்சு வச்ச சோலை
பெண்: சோலையில்ல சோலையில்ல
ஜல்லிக் கட்டு காளை
ஆண்: கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண்: குழலில்ல குழலில்ல
தாஜ்மகால் நிழலு
ஆண்: சேவலோட கொண்ட போல
செவந்திருக்குது உதடு
பெண்: உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
பெண்: அப் அண்ட் டவுன்
அப் அண்ட் டவுன்
ஆண்: கண்ட உடன் வெட்டுதடி
கத்திரிக்கோலு கண்ணு
பெண்: கண்ணு இல்ல கண்ணு இல்ல
கெறங்கடிக்கிற ஜின்னு
ஆண்: பத்த வச்ச மத்தாப்பு போல்
மினுமினுக்குது பல்லு
பெண்: பல்லு இல்ல பல்லு இல்ல
பதிச்ச வைரக் கல்லு
ஆண்: சுருக்கு பைய போல
இருக்கு இடுப்பு
பெண்: இடுப்பு இல்ல இடுப்பு இல்ல
இந்திரன் படைப்பு
ஆண்: கண்ணு பட போகுதுன்னு
கன்னத்துல மச்சம்
பெண்: மச்சம் இல்ல மச்சம் இல்ல
நீ விட்டு வைச்ச மிச்சம்
ஆண்: கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண்: குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு
ஆண்: சேவலோட கொண்ட போல
செவந்திருக்குது உதடு
பெண்: உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
ஆண்: ஏய் பருத்தி பூவப்போல
பதியுது உன் பாதம்
பெண்: பாதம் இல்ல பாதம் இல்ல
பச்சரிசி சாதம்
ஆண்: ஏ வலம்புரி சங்கைப் போல
வழுக்குது உன் கழுத்து
பெண்: கழுத்து இல்ல கழுத்து இல்ல
கண்ணதாசன் எழுத்து