Vinveli Nayaga Song Lyrics in Tamil
பெண்: விண்வெளி நாயகா
விடியல் வீரா
உயிரின் மேலே
விருந்திட வா வா
பெண்: விண்வெளி நாயகா
விடியல் வீரா
உயிரின் மேலே
விருந்திட வா வா
பெண்: அழகிய நாயகா
அருகில் நீ வா
இசையை போலே
இனித்திட வா வா
பெண்: அருவி நீ மௌனம் நீ
கலைகள் நீ நீ என் பிழை நீ
கவனம் நீ சலனம் நீ
முழுமை நீ நீ என் பொன் சுமை நீ
பெண்: அளவில்லா சுவை நீ
எனது முடி முதல் அடி வரை
அழகிய அலை அலை
இறைவனை தழுவிடும் மனநிலை
பெண்: அன்றொரு நாளிலே
அலையின் மேலே
அலையை போன்றே
கலந்து இருந்தோமே
பெண்: கள்வரின் இரவிலே
கனவின் உள்ளே
கனவை போலே
விழித்திருந்தோமே
பெண்: தொலைந்த நேரமே
கரைந்து பூக்கவே
திறந்து வா வா
மாதவா வா
பெண்: கனவில் நான்
தொலைவில் நீ
பொழுதெல்லாம் தீ
தேன் சிறகே
பெண்: இருந்தும் நான்
ரசிக்கிறேன்
நினைவெல்லாம் உன்
உன் மென் குரலே
பெண்: திரும்பி வா விடியலே
உனது இரு விழி இமை வழி
அது தரும் ஒரு மொழி
விழி வழி பெரும் மொழி முகவரி
குழு: விண்வெளி நாயகா
விடியல் வீரா
உயிரின் மேலே
விருந்திட வா வா
குழு: அழகிய நாயகா
அருகில் நீ வா
இசையை போலே
இனித்திட வா வா
குழு: தொலைந்த நேரமே
கரைந்து பூக்கவே
திறந்து வா வா
மாதவா வா